சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் ஏற்படுகின்றன.
நீங்கள் சைவ உணவுக்கு மாறுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று #அட்சயசபாத்ரா மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆயுள் அதிகரிக்கும்
சைவ உணவு பிரியர்கள் நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்கிறார்கள். சைவ உணவு
சாப்பிடுவதால் நாட்பட்ட நோய்கள் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை தடுக்க
முடியும். எனவே அது நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
சைவ உணவுகள் அனைத்திலும் பெரும்பாலும், சாச்சுரேடட் ஃபேட்கள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. இவைதான் இதய
நோயுடன் தொடர்புடையவை. உங்கள் உணவிலிருந்து இறைச்சி உணவுகளை நீக்கிவிட்டால், உங்கள் இதய ஆரோக்கியம் குறிப்பிடம்படியான அளவு
அதிகரிக்கும். வலிப்பு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்க உதவும்
தாவர உணவுகள், குறிப்பாக வல்லாரை கீரை , வெண்டைக்காய் போன்ற ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்த
உணவுகள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடியவை. சைவ உணவுகளில் ஆன்டி
ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இவை மூளையை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது.
உடலில் நரம்பியல் நோய் எற்படும் ஆபத்தை குறைக்கிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களில்தான் அதிகளவில் நார்ச்சத்து உள்ளது.
அது ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. இது மலச்சிக்கலை போக்குகிறது.
வாயுத்தொல்லை தொடர்பான வயிறு பிரச்னைகளை குணப்படுத்துகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
சைவ உணவுகளில் குறைவான கலோரி மற்றும் கொழுப்புகளே உள்ளன. அது ஆரோக்கியமான உடல்
எடையை பராமரிக்க உதவுகிறது. இந்த உணவுகளில் உள்ள நார்ச்சத்துக்கள் எப்போதும்
வயிற்றை நிறைவாகவே வைத்திருக்கும். எனவே அது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
சிறுநீரக செயல்பாடுகளை அதிகரிக்கிறது
தாவர உணவுகள் சிறுநீரக இயக்கத்துடன் தொடர்புடையவை. அவை சிறுநீரகம் சேதம்
அடையாமல் காக்கிறது. சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் ஏற்படாமல்
காக்கிறது.
தலைமுடியையும், சருமத்தையும் காக்கிறது
தாவர உணவுகளில் அதிகமான அளவு வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அது ஆரோக்கியமான சருமம் மற்றும்
தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் இ ஆகியவை பழங்கள் மற்றும்
காய்கறிகளில் அதிகம் உள்ளது. அது கொலொஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. அது
சருமத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் காத்து, தலைமுடியை வலுவாக்குகிறது.
அனைத்து ஆரோக்கியமும் உங்கள் அட்சயபாத்ரா
புட்ஸ் - ல் :
தரம்,சுவை,மணம் நிறைந்த ஆரோக்கியமான உணவு மாதம் அல்லது வாரம் சந்தா முறையில் உங்கள்
இருப்பிடம் தேடி விநியோகம் செய்கின்றோம். #மூன்றுவேளையும் ஆரோக்கியமான தரமான அறுசுவை உணவு. மாதம்/வாரம் சந்தா முறையில்.
உங்கள் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி தருகிறோம்.
Comments
Post a Comment